2025 மே 02, வெள்ளிக்கிழமை

நன்னீர் மீன்பிடியில் அதிகமானோர் ஈடுபாடு

Editorial   / 2020 ஜூன் 10 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பான ஊரடங்கு முடக்க நிலை முற்றாக நீக்கப்பட்டதையடுத்து, மட்டக்களப்பு வாவியில், நன்னீர் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவோரின் தொகை அதிகரித்துள்ளது.

மட்டக்களப்பு வாவியில் மீன்பிடித் தொழிலை ஜீவனோபாயமாக  நம்பி சுமார் 13 ஆயிரம் குடும்பங்கள் உள்ளனவென, மாவட்ட கடற்றொழில் நீரியல்வளங்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் ருக்சான் குரூஸ் தெரிவித்தார்.

தற்போதைய நாள்களில் இவ்வாவியில் நன்னீர் மீன்பிடி மூலம் அதிகமான மீன்கள் பிடிக்கப்டுவதாகவும் மாவட்டத்தின் மீன் தேவையில் அதிகமான பங்கை இந்த வாவி நிறைவேற்றி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வாவியில் மீன்கள் மாத்திரமன்றி, நண்டு, இறால் இனங்களும் பிடிக்கப்படுவதாகவும் மாவட்ட கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .