2025 மே 14, புதன்கிழமை

நல்லின எருமைகளை வளர்ப்பது தொடர்பான பயிற்சி

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 27 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

நல்லின எருமைகளை வளர்ப்பது தொடர்பான பயிற்சிநெறி, தும்பங்கேணியில் அமைந்துள்ள உலக தரிசன நிறுவனத்தின் காரியலயத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

போரதீவுப்பற்று பிரதேச மட்டுப்படுத்தப்பட்ட கால்நடை அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டிலும் உலக தரிசன நிறுவனத்தின் அனுசரணையுடனும் நடத்தப்பட்ட இப்பயிற்சிநெறியில், போரதீவுப்பற்றுப் பிரதேச செயலகத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 37  கால்நடைப் பண்ணையாளர்கள் கலந்துகொண்டனர்.

பண்ணையாளர்கள் தங்களின் வீட்டு வளவில்; கொட்டில்களில் நல்லின எருமைகளை எவ்வாறு வளர்த்தல் காலத்துக்குக்காலம் எவ்வாறான உணவு வகைகளையும் மருந்துகளையும் வழங்குதல், பசுக்களுக்கு வரும் நோய்களுக்கு எவ்வகையான மருந்துகளை வழங்குதல்,  உணவுகளுடன் ஊட்டச்சத்துமிக்க பொருட்களை எவ்வாறு வழங்குதல் ஆகியவை தொடர்பிலும் பரம்பரை சூழல் முகாமைத்துவம், பசுக் கன்றுகளை பராமரித்தல், நோய்கள் வராமல் பாதுகாத்தல் ஆகியவை தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டன.  

மேலும், இப்பயிற்சிநெறியை பூர்த்திசெய்த பயனாளிகளுக்கு அடுத்த மாதம் தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான நல்லின எருமைப் பசுக்கள் உலக தரிசன நிறுவனத்தின் அனுசரணையுடன்; மானியமாக வழங்கப்படவுள்ளதாக போரதீவுப்பற்று பிரதேச மட்டுப்படுத்தப்பட்ட கால்நடை அபிவிருத்திச் சங்கத்தின் பொது முகாமையாளர் எஸ்.தமயந்தி தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X