2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

நவீன வைத்தியசாலையை அமைக்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2016 ஜூலை 26 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், பைஷல் இஸ்மாயில், தீசான் அஹமட், வா.கிருஸ்ணா, பொன் ஆனந்தம், வடமலை ராஜ்குமார், பதூர்தீன் சியானா

கிழக்கு மாகாணத்தில் சகல வசதிகளையும் கொண்டதாக நவீன முறையில்  வைத்தியசாலையொன்று நிர்மாணிக்கப்படவுள்ளதாக அம்மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

இது தொடர்பான கலந்துரையாடல்; மலேசிய தொழிற்றுறை அபிவிருத்திக்கான சிரேஷ்ட பிரதித் தலைவர் அமினுடீன் பின் தவம் தலைமையிலான மலேசிய ஜொஹோர் மாநில முதலமைச்சரின் தூதுக் குழுவுடன் கிழக்கு மாகாண முதலமைச்சரின் கொழும்பிலுள்ள அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றதாகவும் அவர் கூறினார்.

இம்மாகாணத்தில் சகல வசதிகளையும் கொண்டதாக வைத்தியசாலையொன்றை  அமைத்து தனியார் வைத்தியத்துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு தொழில்வாய்ப்பு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதுடன்,
கிழக்கு மாகாண மக்கள் காலடியிலேயே சிறந்த வைத்திய சேவையை  பெறும் வாய்பையும் வழங்க முடியுமெனவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X