2025 மே 13, செவ்வாய்க்கிழமை

நாளை பாரிய ஆர்ப்பாட்டம்

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2019 பெப்ரவரி 19 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாநகர சபை மேயரின் நடவடிக்கைக்கு எதிராக, மட்டக்களப்பு ஓட்டோ சாதிரிகள் நலன்புரிச்சங்கம், மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு முன்பாக நாளை (20) காலை 10 மணிக்கு பாரிய எதிர்ப்பு நடவடிக்கையொன்றில் ஈடுபடவுள்ளதாக, அச்சங்கத்தின் தலைவர் எஸ்.ஜேசுதாசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகர சபை மேயர், மட்டக்களப்பு ஓட்டோ சாரதிகள் சங்கத்துக்கெதிராக எடுக்கும் முடிவுகளுக்கு எதிர்புத் தெரிவித்தும் அவரின் இந்த நடவடிக்கையைக் கண்டித்தும், எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதில், மட்டக்களப்பு ஓட்டோ சாரதிகள் நலன்புரிச்சங்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொள்வார்கள் என்றும் தமது சங்கத்தின் பலத்தைத் தாம்  நிரூபிப்போம் என்றும் யாராக இருந்தாலும் எங்களுடன் நாளை (இன்று) ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்துக்கு வருகை தந்து பேச்சுவார்த்தை நடத்தட்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X