Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
வா.கிருஸ்ணா / 2019 ஜனவரி 02 , பி.ப. 07:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காமாட்சி கிராமத்தில், புதுவருடத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட மாணவர்கள் கௌரவிப்பும் மாணவர்களுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வை, அதிதிகள் புறக்கணித்தமை தொடர்பில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு, புதுவருடத்தைச் சிறப்பிக்கும் வகையில், மாணவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, காமாட்சியம்மன் ஆலயத்தில் நேற்று முன்தினம் (01) மாலை நடைபெற்றது.
காமாட்சிநகர் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் இரா.நடேசபதி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மண்முனைப்பற்று கோட்டக்கல்வி அதிகாரி கே.நல்லதம்பி மட்டுமே அதிதியாகக் கலந்துகொண்டார்.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசனும் சிறப்பு அதிதிகளாக மாவட்ட செயலாளர் எம்.உதயகுமார், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம், மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் சத்தியானந்தி, பிரதேசசபைத் தவிசாளர் மகேந்திரலிங்கம் உட்பட பல்வேறு தரப்பினரும் அழைக்கப்பட்டு, பிரமாண்டமாக நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எனினும், இறுதிவரையில் கோட்டக்கல்வி அதிகாரி மட்டுமே கலந்துகொண்டு மாணவர்களைக் கௌரவித்ததுடன், மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களையும் வழங்கிவைத்தார்.
புதுவருட தினத்தில் மிகவும் பின்தங்கிய பகுதி மக்களை, அதிதிகள் புறகணித்துள்ளதாக, இங்கு உரையாற்றியவர்கள் கவலை தெரிவித்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
46 minute ago
1 hours ago