2025 மே 03, சனிக்கிழமை

நிதி சேகரிக்கும் திட்டம் முன்னெடுப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 20 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

மட்டக்களப்பு, கல்குடா தொகுதியில் ஐந்து அமைப்புகள் ஒன்றிணைந்து கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கி, சுமார் 10 மில்லியன் ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டு, நிதி சேகரிக்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளன.

எதிர்வரும் நோன்பு காலத்தை முன்னிட்டு, கல்குடா தொகுதியில் வசிக்கும் வறுமை நிலையிலுள்ள குடும்பங்களுக்கு உதவும் நோக்கிலேயே, இத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கல்குடா கிளை, ஸகாத் நிதியம், பிரதான பள்ளிவாசல்களின் பிரதிநிதிகள், வர்த்தக சங்கங்கள், உரிமைகள், அபிவிருத்திக்கான ஒன்றியம் ஆகியவைகள் ஒன்றிணைந்து, கொவிட் 19  ரமழான் கால நிவாரணப் பணிகளுக்கான சமூக நிறுவனங்களின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு, இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கூட்டமைப்புக்கு உதவிகளை வழங்க பிரதேச முக்கியஸ்தர்கள் பூரண ஒத்துழைப்புகளை வழங்கி வருவதாக, மேற்படி கூட்டமைப்பின் செயற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X