2025 மே 05, திங்கட்கிழமை

நினைவேந்தலில் ஈடுபட்ட எண்மர் கைது

Princiya Dixci   / 2021 மே 18 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ்

மட்டக்களப்பு, கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள நாகர்வட்டை கடற்கரையில் வைத்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் ஈடுபட்டிருந்த 8 பேர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், இன்று (18) கைதுசெய்து செய்யப்பட்டுள்ளனர் என கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை புனரமைக்கும் செயற்றிட்டத்தில் இவர்கள் ஈடுபட்டதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்கவின் பணிப்புரைக்கமைவாக, கல்குடா பொலிஸாருடன், ஏறாவூர்ப் பொலிஸ் குழுவினரும் இணைந்து மேற்படி எண்மரையும் கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து கைதுசெய்யப்பட்ட இவர்கள், எதிர்வரும் 3 நாட்கள் பொலிஸ் தடுப்புக் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X