2025 மே 05, திங்கட்கிழமை

நினைவேந்தல் அனுஷ்டிப்பு; தடை உத்தரவு

A.K.M. Ramzy   / 2021 மே 17 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன், வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை பொது இடங்களில் அனுஷ்டிப்பதற்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் காணாமல் போன உறவுகள் சங்கம் ,பொது அமைப்புக்கள் உட்பட 26 பேருக்கு எதிராக 10 பொலிஸ் நிலையங்களில்  நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

மே 18ஆம் திகதி  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம்பெறவுள்ள நிலையில் வாகரை, வாழைச்சேனை, ஏறாவூர், கரடியனாறு, மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி, வெல்லாவெளி, கொக்கட்டிச் சோலை, ஆயித்தியமலை, காத்தான்குடி ஆகிய 10 பொலிஸ் நிலையங்களால்,  நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டு அதனை இரவோடு இரவாக உரியவர்களிடம் பொலிஸார் கையளித்துள்ளனர்.

இந்த நீதிமன்ற தடை உத்தரவில் பொலிஸ் பிரிவுகளில் உள்ள பிரதேசங்களில்  அனுமதியின்றி சட்டவிரோதமாக 16ம் திகதியில் இருந்து 14 நாட்களுக்கு எந்தவிதமான கூட்டங்களோ அல்லது ஆர்ப்பாட்டங்களையே நடாத்தக்கூடாது எனவும் தனிமைப்படுத்தல் மற்றும் கொரோனா நோய் தடுப்பு விதிக்கு மற்றும் சட்டத்துக்கு முரணான   கூட்டங்களையே அல்லது ஒன்று கூடல்களோ வாகனம் மற்றும் நடைபேரணிகளுக்கு அல்லது நினைவேந்தல்கள் எதுவும் அமைப்பு மற்றும் குடும்ப உறவு சார்ந்த யாரும் உடந்தை அல்லது ஆதரவு வழங்க கூடாதென தடை உத்தரவைப் பிறப்பிப்பிக்கப்பட் டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X