2025 மே 02, வெள்ளிக்கிழமை

நினைவேந்தல் அனுஷ்டிப்பு

Editorial   / 2020 ஜூன் 07 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

மட்டக்களப்பு, புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்திலே பங்குத் தந்தையாகப் பணியாற்றிய, படுகொலை செய்யப்பட்ட அருட்தந்தை சந்திரா பெர்ணான்டோ  அடிகளின் 32ஆவது நினைவேந்தல், புனித மரியாள் பேராலய பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அன்னாரது “சமாதானத்தின் காவலன்“ சமாதியில், நேற்று (06) இரவு உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

மரியாலய தேவலாய பங்குத்தந்தை வண. சிலமன் அன்னதாஸ் தலைமையில்  நடைபெற்ற இந்த நினைவேந்தலில் அருட்தந்தைகள், படுகொலை செய்யப்பட்ட அருட்தந்தையின் உறவினர்கள்,  பொதுமக்கள் கலந்துகொண்டு, திருப்பலி ஒப்புக் கொடுத்து, சமாதியில் சுடரேற்றி, மலர் தூவி, அஞ்சலி செலுத்தினர்.  

அருட்தந்தை சந்திரா பெர்ணான்டோ அடிகள், 1988 ஜுன் 6ஆம் திகதி அவரது 46 வயதிலே இனம்தெரியாத துப்பாக்கி தாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .