Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மே 18 , பி.ப. 03:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
“ஜனாஸா எரிப்பை எதிர்த்து நீதி மன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்திருக்கும் அரசியல் கட்சிகள் மட்டுமன்றி, ஏனையயோரும் தமது நியாயங்களை மக்களுக்குள் எடுத்துச் சொல்ல தவறியிருக்கின்றனர்” என முன்னாள் அமைச்சரும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாளருமான பசீர் ஷேகுதாவூத் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கைகள் தோல்வியடைந்த பின்னர், மக்கள் மன்றுக்கு செல்வதே பொருத்தமானது.
“நான் சட்டம் தெரிந்தவனல்ல. ஆயினும், எந்த மதமானாலும் அதன் நம்பிக்கை தொடர்பான ஒரு தீர்ப்பை அடிப்படை மனித உரிமை மீறல் என்று தொடரப்படும் வழக்கில் சாதகமாகப் பெறுவது கடினமாக இருக்கலாம்.
“ஆனால், இவ்வழக்குகளை தொடுத்தவர்களுக்கு முஸ்லிம் மக்கள் மத்தியில் குறிப்பிட்டளவு செல்வாக்கு ஏற்படும். சூழ்நிலையைப் பொறுத்து, இச்செல்வாக்கு சறுக்கவும் கூடும்.
“வழக்கின் தீர்ப்பு எவ்வாறு அமைந்தாலும் சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிம் சமூகத்தின் மீது ஏற்கெனவே திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டிருக்கிற கோபம் அதிகரிப்பதற்கான சந்தர்ப்பம் உள்ளது. அதுவும் சுமந்திரன் முன்நிலையாகி வாதாடுகிற வழக்கு என்றால் இந்தக் கோபம் இரட்டிப்பாகும்.
“சுகாதாரத்தரப்பிடம் நீதிமன்று அபிப்பிராயம் கேட்டு, எரிப்பது அவசியம் என்று தீர்ப்பைத் தந்தால், எரிப்பது நிரந்தரத் தன்மையை அடைந்துவிடுமல்லவா? இப்படியாயின் அடுத்தது என்ன? தெற்கில் ஒவ்வொரு முஸ்லிம் வீட்டின் உள்ளேயும் 'சீன வெடி' கொழுத்தி எறியப்பட்டு வெற்றிக்கொண்டாட்டம் நடந்தால், அதனைத் தடுப்பது யார்? அரசாங்கமா, இராணுவமா, வழக்குகளைத் தாக்கல் செய்தவர்களா, இல்லை வழக்குகளில் ஆஜரான சட்டத்தரணிகளா?
“இவ்விடயத்தில், நியாயமாக குரல் கொடுத்த முஸ்லிம் காங்கிரஸ் இதனை நிதானமாகத்தான் கையாண்டு வந்தது. ரிஷாட் பதியுதீன் வழக்குத் தொடுக்கும் வரைதான் இந்த நிதானம் நின்றுபிடித்தது. தற்போது, ரவூப் ஹக்கீம் - அலிசாஹிர் மௌலானாவை வைத்து வழக்கை வைத்துவிட்டார்.
“இதனை 'அரசியல் நகர்வு' என்று அழைக்காமல், 'முஸ்லிம் மக்களின் நலன் சார்ந்த நகர்வு' என்று எப்படி சொல்வது?” என்றார்.
7 hours ago
19 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
19 Jul 2025