2025 மே 13, செவ்வாய்க்கிழமை

‘நிரந்தரத் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை’

Editorial   / 2019 பெப்ரவரி 15 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

நிரந்தரத் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இந்த விடயத்தில் நானும் எனது தலைமையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மிக நேர்மையாகச் செயற்படுகின்றோமென, உள்ளூராட்சி மாகாணசபைகள் இராஜாங்க அமைச்சர் எம்.என்.என்.ஹரீஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முன்னெடுக்கப்படவுள்ள உள்ளூர் அபிவிருத்திச் செயற்றிட்டம் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம்,  மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

கிழக்கு மாகாண உதவி உள்ளூராட்சி ஆணையாளர் எம்.மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், உள்ளூராட்சி மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் எம்.என்.என்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்தக் கூட்டத்தில் உள்ளூராட்சி மாகாணச பைகள் அமைச்சின் உள்ளூராட்சிமன்ற அபிவிருத்திக்குப் பொறுப்பான தேசிய இணைப்பாளர் தர்சன பண்டார, மட்டக்களப்பு மாநகரசபை மேயர் த.சரவணபவன் உட்பட நகரசபை தலைவர்கள், பிரதேசசபை தவிசாளர்கள், பிரதி தவிசாளர்கள், பிரதேச, மாநகர, நகரசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 144 வட்டாரங்களிலும் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்களை ஒருங்கிணைக்கும் வகையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் 238 உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உலக வங்கி ஊடாக 1,000மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடுசெய்யப்படவுள்ளதுடன், அதன்மூலம் கிராமங்களின் அனைத்துத் தேவைகளையும் நிறைவுசெய்யும் வகையில் அபிவிருத்திச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நேரடிக் கண்காணிப்பின் கீழ், உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சு உள்ளூராட்சிமன்றம் ஊடாக இந்த அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X