2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

நிலக்கடலைச் செய்கை மும்முரம்

Princiya Dixci   / 2021 ஜூலை 01 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

ஜனாபதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமான “நஞ்சற்ற நாடு” எனும் எனும் தொனிப்பொருளில், சேதனப் பசளைகளைப் பயன்படுத்தி, மரக்கறி மற்றும் விவசாய உற்பத்திகளை, மட்டக்களப்பு மாவட்ட மேட்டு நிலப் பயிர்ச் செய்கைகளில் மேற்கொள்ளப்பட்டுவருதாக மாவட்ட விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு மாவட்டத்தில் 1,580 ஏக்கரில் நிலக்கடலைச் செய்கை இம்முறை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்  அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, பெரும்பாலான விவசாய போதனாசிரியர் பிரிவுகளில் நிலக்கடலை விதைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தின் பிரதான மேட்டு நிலப் பயிர்ச் செய்கையான நிலக்கடலை உற்பத்தியில் பெருமளவிலான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X