Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2018 மே 27 , பி.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு, நிவாரணம் வழங்குவதற்காக நிவாரணப் பொருள்களை சேகரிக்குமாறு, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலாளர்கள் மற்றும் அரச திணைக்களத் தலைவர்களுக்கும் மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற கால நிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நிவாரணம் வழங்குவதற்கான நிவாரணப் பொருட்களைச் சேகரிக்கும் திட்டத்தை, மட்டக்களப்பு மாவட்ட செயலகம் ஒழுங்கு செய்துள்ளது.
பிரதேச பொது மக்கள், அரச நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள் மற்றும் தன்னார்வலர்களிடமிருந்து நிதியுதவி, மற்றும் உலர் உணவுப் பொருட்கள், புதிய ஆடைகள், பால்மா பக்கட்டுக்கள், குடிநீர் போத்தல்கள் போன்ற நிவாரணப் பொருள்களை சேகரித்து, மாவட்டச் செயலகத்தில், எதிர்வரும் ஜுன் மாதம் 1ஆம் திகதிக்கு முன்னர் கையளிக்குமாறும், பழுதடையக் கூடிய பொருட்களைச் சேகரிக்க வேண்டாம் என்றும் மாவட்ட அரசாங்க அதிபரால் அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.
நிவாரணப் பொருட்களைக் கையளிப்பது தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு, மாவட்ட செயலகம், மட்டக்களப்பு தொலைபேசி இல. 065-2227701, 0773957885 மற்றும் நிருவாக உத்தியோகத்தர், மாவட்ட செயலகம் மட்டக்களப்பு 065-2222365, 0779000880 தொடர்புகளை ஏற்படுத்தி பொருட்களைக் கையளிக்க முடியுமென மட்டக்களப்பு மாவட்ட அரச ஊடகப்பிரிவுத் தகவல் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
5 hours ago
7 hours ago