2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

நிவாரணப் பொருள்கள் வழங்கி வைப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 26 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பில் சிக்கன கடன் உதவிக் கூட்டுறவுச் சங்க பயனாளிகளுக்கு உலர் உணவு நிவாரணப் பொருள்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக, சங்கத்தின் தலைவர் எஸ்.பீ.புவிராஜசிங்கம் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முடக்க நிலை இருந்தவேளையில், அந்தச் சங்கத்தின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு நேற்று முன்தினம் இந்த உலருணவு நிவாரணம் வழங்கி வைக்கப்பட்டது.

இலங்கேஸ்வரி சிக்கன கடன் உதவிக் கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களான சுமார் 40 பயனாளிகள், தலா ஆயிரம் ரூபாய் பெறுமதியிலமைந்த உலருணவுப் பொதிகளைப் பெற்றுக் கொண்டார்கள்.

மேற்படி சங்க உறுப்பினர்களின் சேமிப்பு சங்க நிதியிலிருந்தே இந்த உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டதாக சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சங்கத்தின் செயலாளர் செல்வி செபமாலைமேரி, பொருளாளர் கே. ஹீன்நிலமே உட்பட  உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X