2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒத்திவைப்பு

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 12 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாநகர சபை மேயரால் மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் மாநகர சபை ஆணையாளருக்கு எதிராக தொடுக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எதிர்வரும் 11ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு, மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில், நீதிபதி எம்.என்.அப்துல்லாவினால் நேற்று (11) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, மட்டக்களப்பு மாநகர சபை மேயர் தி.சரவணபவன், மாநகர ஆணையாளர் எம்.தயாபரன் ஆகியோர் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.

01-04-2021வ ழங்கிய கட்டளையின் அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டது. அதாவது, மாநகர சபையின் 10 அதிகாரங்கள் ஆணையாளருக்கு கையளிப்புச் செய்யப்பட்டிருந்தன.

எனினும், தொடர்ந்து மாநகர சபையின் செயற்பாடுகளுக்கு குந்தகமளிக்கும் வகையில், ஆணையாளர் செயற்பட்டதன் காரணமாக மாநகர முதல்வரால் கையளிக்கப்பட்ட அதிகாரங்களை மீளப்பெறுவதற்கான அதிகாரங்களும் காணப்பட்டதன் அடிப்படையில் ஒரு சபை தீர்மானத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட அதிகாரங்கள் மீளப்பெறப்பட்டன.

இந்த அதிகாரங்களை ஆணையாளர் தலையிடக்கூடாது என மேல் நீதிமன்றத்தால் கட்டளை வழங்கப்பட்டிருந்தன.

எனினும், அந்த தீர்மானத்தை மீறும் வகையில் மாநகர சபையின் ஆணையாளர் செயற்பட்டதன் காரணமாக நீதிமன்ற அவமதிப்பு வழங்கு தொடரப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .