Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
பேரின்பராஜா சபேஷ் / 2019 மார்ச் 13 , பி.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, செங்கலடி - பதுளை வீதியில், காயன்குடா குளத்தில் மூழ்கி பாடசாலை மாணவனொருவன் உயிரிழந்துள்ளாரென, கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (12) மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில், காயன்குடா கண்ணகி வித்தியாலயத்தில் கல்வி பயிலும் ஜெயராசா ஜனார்தனன் என்ற மாணவனே உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவன், சம்பவ தினத்தன்று, குளத்தின் ஆழத்துக்கு நீராடச் சென்றவேளை மூழ்கியுள்ளார். மாணவன் நீரில் மூழ்குவதை அவதானித்து அவருடன் நீராடிய சகோதரி அழுதபோது, அயலவர்கள் வந்து குறித்த மாணவனை மீட்ட போதும் அவர் உயிரிழந்து காணப்பட்டுள்ளார்.
சடலம், பிரேதப் பரிசோதனைகளுக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
காயன்குடா பகுதியில் நீர் தட்டுப்பாடு காரணமாக அப்பிரதேசத்தில் வாழும் சுமார் 250 குடும்பங்கள், குடிநீரின்றி பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றன. குடிநீருக்காக 2 குழாய் கிணறுகள் மாத்திரமே அங்கு அமைக்கப்பட்டுள்ளமையால், குளிப்பதற்காக காயன்குடா குளத்தையே பயன்படுத்தி வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
42 minute ago
45 minute ago