2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நெல்லை பதுக்கிய களஞ்சியசாலைகளுக்கு சீல்

Niroshini   / 2021 ஓகஸ்ட் 29 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான நெல் பதுக்கி வைக்கப்பட்ட களஞ்சியசாலைகளுக்கு சீல் வைக்கப்பட்டதுடன், உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, மட்டக்களப்பு நகர், காத்தான்குடி, களுவாஞ்சிக்குடி, ஏறாவூர், ஒட்டமாவடி மற்றும் வாழைச்சேனை ஆகிய பிரதேசங்களில், பதிவுசெய்யப்படாத நெல் களஞ்சியசாலைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீது மட்டக்களப்பு மாவட்ட நுகர்வோர் அதிகார சபையினரால், கடந்த நான்கு நாள்களாக திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது, பதிவு செய்யப்படாமல் நெல்லை களஞ்சியப்படுத்தி பதுக்கி வைத்திருந்தமை, பல ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளை களஞ்சியப்படுத்தி வைத்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ்,  பல களஞ்சியசாலைகளுக்கு சீல் வைக்கப்பட்டதுடன், உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

அத்துடன், நெல்லைப் பதுக்கி வைத்திருந்த சில வியாபாரிகள், தானாக முன்வந்து, தங்களுடைய நெல்களை அரசாங்க நெல் சந்தைப்படுத்தும் அதிகாரசபைக்கு வழங்கவும் உடன்பட்டனர்.

வியாபாரிகள் நுகர்வோரை சுரண்டுகின்ற மற்றும் அவர்களின் உரிமைகளை மீறுகின்ற எந்தவொரு செயற்பாட்டிலும் ஈடுபடுகின்ற வியாபாரிகளுக்கு எதிராக பாரபட்சம் பாராமல் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், மேலும் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என, நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை பணிப்பாளர் ஆர். எப். அன்வர் சதாத், இதன்போது தெரிவித்தார்.

மேலும், வியாபார நுகர்வோர் அதிகார சபையின் சட்டத்தை மீறிய வியாபார நிலையங்களுக்கு எச்சரிக்கை அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .