2025 மே 07, புதன்கிழமை

நெல்லை விற்கமுடியாமல் திண்டாடும் விவசாயிகளுக்கு உதவுமாறு கோரிக்கை

Editorial   / 2020 ஜனவரி 22 , பி.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு மாவட்டத்தில் அறுவடை செய்யும் நெல்லை விற்பனை செய்ய முடியாமல் விவசாயச் செய்கையாளர்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க,அரசு நெல்லைக் கொள்வனவு செய்வதற்குரிய நிதியை ஓதுக்கீடு செய்யுமாறு கிழக்கு

மாகாண சபை முன்னாள்  உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கியஸ்தருமான இரா.துரைரெத்திணம்  ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அவர் ஜனாதிபதிக்கு  அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:,
  2019ம் ஆண்டு சுமார் ஒரு இலட்சத்தி இருபதாயிரம் ஏக்கர் காணி வேளாண்மை செய்யப்பட்டிருப்பதாக அறியக் கூடியதாக உள்ளது.இதில் இருபதாயிரம் தொடக்கம் முப்பதாயிரத்திற்கு உட்பட்ட வேளாண்மைச் செய்கை
பகுதிச் சேதம், முழுச்சேதம் அடைந்த நிலையில் தொன்னூறாயிரம் ஏக்கர் அறுவடை செய்யக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. சராசரி தொன்னுறாயிரம் ஏக்கரும்

அறுவடை செய்யப்படுமிடத்து இந் நெல்லை இன்று வரையும் அரசாங்கம் கொள்முதல் செய்யவில்லை.

இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பல சிரமத்திற்கு மத்தியில் நெல்லை விற்பனை செய்ய முடியாமல் குறைந்த விலையிலேயே தனியார்களுக்கு நெல்லை விற்பனை செய்ய வேண்டிய பரிதாபகரமான நிலைக்கு தள்ளப்பட்டு

ள்ளனர்.இதனால் தொடர்ச்சியாக இம் மாவட்டத்தில் ஒவ்வொரு வருடமும் உரிய நேரத்திற்கு அரசாங்கம் அறுவடை செய்யும் நெல்லை விவசாயிகளிடமிருந்து

கொள்வனவு செய்யாமல் இருப்பதால் வேளாண்மைச் செய்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப் படுவது வழமையாக மாறிவிட்டது.

இங்குள்ள அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்கும் போது மாவட்டத்தில் நெல் அறுவடை செய்யும் காலத்தில் உரிய நேரத்திற்கு நிதி கிடைக்காமல் தாமதமாகி நிதி

கிடைப்பதால் நெல் அறுவடை செய்து முடியும் இறுதிக்கட்டத்திலேயே நெல் சந்தைப்படுத்தும் சபையினரால் நெல்கொள்வனவு

செய்யப்படுகின்றது.தொடர்ச்சியாக பலஆண்டு காலமாக வேளாண்மைச் செய்கையாளர்கள் வெள்ளத்தினாலும், கிருமிகளாலும், வரட்சியினாலும் ஒருசிலரைத் தவிர முப்பது வீதத்திற்கு மேற்பட்டவர்கள் கையோடு நஷ்டம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளன.

உரிய பெறுமதியான விலைக்கு நெல்லை விற்பனை செய்தால் மட்டுமே இந்த முப்பது வீதமானவர்கள் சமன் செய்ய முடியும். வேளாண்மை காணிகளை குத்தகைக்கு எடுத்து வேளாண்மை செய்கின்றவர்கள் தற்கொலை செய்ய வேண்டிய

நிலைக்கு ஆளாக்கப்படுகின்றனர்.  எனவே மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்போகம், சிறுபோகங்களில் வேளாண்மை செய்கை  அறுவடை செய்யப்படும்

முன்னே நெல்லை  கொள்வனவு செய்வதற்கு   நிதியை ஓதுக்கீடு செய்வதற்கு விசேடமான அமைச்சரவை தீர்மானம் எடுத்து அந் நிதியை வருடத்தில் டிசெம்பர்

மாதமும்,மார்ச் மாதமும்  நெல் சந்தைப்படுத்தும் சபையில்  நிதி கையில் இருக்கக் கூடியவாறும், நெல் சந்தைப்படுத்தும் சபைக்குரிய அலுவலகம் ஓன்றை இம் மாவட்டத்தில் திறப்பதற்கு வழிவகுக்க வேண்டும்.

இரண்டு இலட்சம் ஏக்கர் விவசாயம் செய்யக்கூடிய மாவட்டத்தில் நெல்சந்தைப் படுத்தும் அலுவலகம் இல்லாமல் இருப்பதும். உரிய நேரத்துக்கு நெல்லைக் கொள்வனவு செய்யாமல் இருப்பதும் கடந்த அரசாங்கத்தில் உள்ள கொள்கை

ரீதியான தவறை இந்த அரசாங்கத்துக்குரிய   ஜனதிபதியும் செய்ய மட்டார் என நம்புகின்றோம் எனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X