2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

புகைப்படக் கலையின் திறனை வளர்ப்பதற்கான சந்திப்பு

Gavitha   / 2016 செப்டெம்பர் 13 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். பாக்கியநாதன்

புகைப்படக் கலையின் திறனை வளர்த்துக் கொள்ளும் நோக்கோடு குறித்த துறை சார்ந்தோருடனான சந்திப்பு மட்டக்களப்பு பயனியர் வீதியிலுள்ள ஈஸ்டன் அசோசியேசன் போட்டோ கிறபிக் ஆட் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (11) மாலை நடைபெற்றது.

போட்டோ டெனிக்கா பிரைவட் லிமிட்டட் நிலையத்தின் நிறைவேற்று அதிகாரி எஸ். நிமால் கலந்து கொண்டு, மட்டக்களப்பில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு உல்லாசப் பிரையாணிகளைக் கவரும் மரபுரிமை மிக்க இடங்களைப் பிரதிபலிக்கும் புகைப்படக் கலையின் வான்மை, உயிரோட்டமுள்ள படங்களை ஆக்கும் திறன் மற்றும் நவீன புகைப்படக் கருவிகள் கொண்டுள்ள புதிய தொழில் நுட்பங்கள் பற்றி தெளிவுபடுத்தினார்.

ஈஸ்டன் அசோசியேசன் போட்டோ கிறபிக் ஆட் நிலைய அங்கத்தினர்களுக்கு புகைப்படம் எடுப்பதன் திறனை வளர்த்துக் கொள்வதற்கான பயிற்சிப் பட்டறை நடாத்தவதற்காக ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X