2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பிடிக்கும் மீன்களை கடலில் கொட்டும் அவலம்

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 26 , மு.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ஜெயஸ்ரீராம்  

மட்டக்களப்பு, வாகரை மாங்கேணி கடலில் சாள, சூடை எனப்படும் மீன்கள் அதிகளவு பிடிபடுவதனால் இதன் விற்பனை விலையில் வீழ்ச்சி காணப்படுவதாக மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். 

தற்போது இவை, ஒரு கிலோகிராம் 20 ரூபாய்க்கு விற்பனையாகின்றன. அத்துடன், சில மீனவர்கள், அந்த மீன்களை விற்பனை செய்யமுடியாமல் அவற்றினை காகம் மற்றும் நாய்களுக்கு உணவாக வழங்குகின்றனர். இன்னும் சிலர் கடலிலேயே கொட்டி விடுகின்றனர். 

தாம் ஒரு தடவை கடலுக்குச் சென்று மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கு, 1,500 ரூபாய்க்கு மண்ணெண்ணை செலவாகிறது என்றும் இந்த மீன் இனங்களை தற்போது அதிகளவு பிடிபடுவதனால் வியாபாரிகள் அதனை கொள்வனவு செய்வதில் விருப்பம் காட்டுவதில்லை. இவ்வாறான நிலைமையால், தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர். 

இங்கு பல தரப்பட்ட மீன்கள் பிடிக்கப்பட்டபோதிலும் கீரி மீன்கள், சீலா மீன்கள், நகரை மீன்கள், சூடை மீன்கள் மற்றும் சாள, சூடை மீன்கள் அதிகம் பிடிபடுகின்றன.  

ஒரு கிலோகிராம் கீரி மீன், 200 ரூபாய்கும் நகரை மீன்கள் 80 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இனி வரும் மாதங்களில் கீரி மீனின் விலையிலும் வீழ்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் இதே போன்று கடந்த வருடமும் ஒரு கிலோகிராம் கீரி மீன் 20 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளோம் என்றனர். இதில், வியாபாரிகளே அதிகளவு நன்மை பெறுவதாகவும் மீனவர்கள் மேலும் தெரிவித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X