Suganthini Ratnam / 2016 ஒக்டோபர் 26 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ்
பெண்ணைக் கடத்திச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட நபரை சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தலின் பேரில் நேற்று செவ்வாய்கிழமை மட்டக்களப்பு மாவட்ட நீதவான் எம்.கணேசராஜா விடுதலை செய்துள்ளார்.
05.09.2014 பெண்ணைக் கடத்திச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட வழக்கில் மேற்படி நபர் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தலைப் பெறும்பொருட்டு சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட வழக்கில் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கமைய 25.10.2016 அன்று முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
பெண்ணைக் கடத்திச் சென்றார் என்ற குற்றச்சாட்டில் இவருக்கு எதிராக போதிய சான்றுகள் இல்லாத காரணத்தினாலும் இருவரும் காதல் திருமணம் புரிந்துள்ள காரணத்தினால் நபர் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
8 minute ago
17 minute ago
17 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
17 minute ago
17 minute ago
23 minute ago