Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 30 , மு.ப. 07:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
பெண்ணைத் தாக்கிவிட்டு வீட்டிலிருந்த நகைகள், பணம் என்பவற்றைக் கொள்ளையிட்டுத் தப்பிச் சென்ற சம்பவம், புதிய காத்தான்குடி, பரீட் நகர் பகுதியில், இன்று புதன்கிழமை (30) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
அதிகாலை சுமார் இரண்டு மணியளவில் வீட்டிலிருந்த பெண் மலசலக்கூடத்துக்குச் செல்ல முற்பட்ட போது மறைந்திருந்த திருடன் குறித்த பெண்ணை பொல்லால் தாக்கிவிட்டு, பெறுமதியான நகை மற்றும் பணங்களைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
வீட்டிலிருந்த மற்றவர்கள் ஆழ்ந்த உரக்கத்தில் இருந்துள்ளதாகவும் இரண்டரை இலட்சம் ரூபாய் பணம் மற்றும் இருபது பவுன் தங்க நகை என்பன திருடப்பட்டுள்ளதாக விசாரனைகளின் போது தெரியவந்துள்ளது.
பெண், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதுடன், காத்தான்குடிப் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
30 minute ago
32 minute ago
40 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
32 minute ago
40 minute ago
49 minute ago