Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 19 , மு.ப. 09:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித், வா.கிருஸ்ணா
2010ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம்; மட்டக்களப்பு நகரில் ஆரம்பிக்கப்பட்ட பொது நூலகத்துக்கான கட்டட நிர்மாண வேலையை பூர்த்தி செய்யுமாறு கோரி எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபை அமர்வில் தனிநபர் பிரேரணையைச் சமர்ப்பிக்கவுள்ளதாக அம்மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
மேற்படி நூலகத்துக்கான கட்டட நிர்மாண வேலை 2012ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டது. கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனால் முன்மொழியப்பட்டு, ஆரம்பிக்கப்பட்ட நிர்மாண வேலை அவர் ஆதரித்து அமைக்கப்பட்ட மந்திரி சபையாலேயே இடைநிறுத்தப்பட்டது.
அரசியல் பேதம் பார்க்காமல் மக்களின் நலன் கருதி நூலகத்துக்கான நிர்மாண வேலையை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
இந்நூலகம் அமைக்கத் தொடங்கும்போது, 251 மில்லியன் ரூபாய் செலவாகும் என்று கணக்கிடப்பட்டது. இந்நிலையில், 68 மில்லியன் ரூபாய் நூலக நிர்மாண வேலைக்காக செலவிடப்பட்டது. இதன் நிர்மாண வேலைக்கு இன்னும் 147 மில்லியன் ரூபாய்; தேவை என்றும் கூறப்படுகின்றது. எனவே, எதிர்வரும் 2017ஆம் ஆண்டுக்குள் இதன் நிர்மாண வேலையை பூர்த்தி செய்ய வேண்டும் என்று கோரவுள்ளதாகவும் அவர் கூறினார்.
17 minute ago
18 minute ago
38 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
18 minute ago
38 minute ago
3 hours ago