Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 04 , மு.ப. 06:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு, ஏறாவூர் நகர பிரதேசத்தில் இம்மாதம் (செப்டெம்பர்) முழுவதையும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்குரிய மாதமாக ஏறாவூர் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் பிரகடனப்படுத்தி உள்ளதை தான் வரவேற்பதாக ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகருமான சிந்தக பீரிஸ் தெரிவித்தார்.
பொதுமக்கள், சமூக நிறுவனங்கள், மத அமைப்புகள் ஆகியவை போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல்களை ஒழிப்பதில் பொலிஸாருடன் கைகோர்க்க வேண்டும்;. இவ்வாறு ஒருமித்த ஒத்துழைப்பு பொலிஸாருக்குக் கிடைக்குமாயின் போதைப்பொருள் பாவனை, விற்பனை, குற்றச்செயல்களை இல்லாதொழிக்க முடியுமெனவும் அவர் கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 'போதைப்பொருள் விற்பனை, பாவனை ஒருபோதும் சமூகத்துக்கு வெளியில் இடம்பெறுவதில்லை. ஆதலால், சமூகத்திலுள்ள அனைவரும் போதைப்பொருள் சீரழிவு குறித்து மிகுந்த எச்சரிக்கையுடனும் சமூகப் பொறுப்புடனும் செயற்பட வேண்டும்.
வெறுமனே பொலிஸார் மாத்திரம் போதைப்பொருள் விற்பனை, பாவனை மற்றும் குற்றச்செயல்களை இல்லாதொழிக்க வேண்டுமென்று சமூகம் எண்ணி செயலற்றுப் போகக்கூடாது.
போதைப்பொருள் பாவனை அல்லது விற்பனையுடன் சம்பந்தப்பட்ட ஒருவரைக் கைதுசெய்து அவரைப் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுவருவதற்கு முன்னரே, அவரை விடுவிக்குமாறு சமூகத்திலுள்ள பலர் குரல் கொடுக்கின்ற நிலைமை இன்னமும் காணப்படுகின்றது. இது பொலிஸாருக்கு சங்கடத்தை ஏற்படுத்துகின்றது.
ஏறாவூரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரகடன விழிப்புணர்வு நடவடிக்கையை ஒரு குறியீடாக எடுத்து அதனை ஏனைய பகுதிகளுக்கும் வெற்றி அளிக்கச் செய்ய வேண்டும்' என்றார்.
29 minute ago
31 minute ago
39 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
31 minute ago
39 minute ago
48 minute ago