2025 மே 13, செவ்வாய்க்கிழமை

புதிய உணவகங்களுக்கு அனுமதி பெறப்பட வேண்டும்

Suganthini Ratnam   / 2016 மார்ச் 01 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி நகரசபைப் பிரிவில் உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் ஹோட்டல்களை புதிதாக ஆரம்பிப்பதாயின், நகரசபையினதும்  பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களினதும்; அனுமதி பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமென காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் தெரிவித்தார்.

உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் ஹோட்டல்களின் உரிமையாளர்களுக்கான செயலமர்வு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார்.

அதாவது உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் ஹோட்டல்களை புதிதாக ஆரம்பிப்பதற்கு முன்னர் காத்தான்குடி நகரசபையின் அனுமதி பெறப்படவேண்டும். இதைத் தொடர்ந்து, காத்தான்குடி பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களினால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு சுகாதாரச் சான்றிதழ் பெறப்பட வேண்டுமெனவும் அவர் கூறினார்.  

அத்துடன், இவற்றில் கடமையாற்றும் ஊழியர்கள் மருத்துவச் சான்றிதழ் பெற்றிருப்பது அவசியம். இந்தச் சான்றிதழைப் பெறுவதற்கு காத்தான்குடி சுகாதார அலுவலகத்தில் விண்ணப்பப்படிவத்தைப் பெற்றுக்கொண்டு,  அரசாங்க வைத்தியசாலைக்குச் செல்லவேண்டும். அங்கு வைத்தியப் பரிசோதனை மேற்கொண்டு மருத்துவச் சான்றிதழைப் பெற்று, அதை காத்தான்குடி பொதுச் சுகாதார அலுவலகத்தில் ஒப்படைத்து, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் அறிக்கையுடன் அச்சான்றிதழைப் பெற வேண்டுமெனவும் அவர் கூறினார்.

மேலும், உணவு நஞ்சாவதற்கு கோழி இறைச்சி மற்றும் முட்டைகளில் ஏற்படும் கிருமித்தாக்கமும் காரணமாகின்றதெனவும் அவர் கூறினார்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X