2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

புதிய பஸ் சேவை ஆரம்பம்

Princiya Dixci   / 2016 நவம்பர் 18 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

நல்லதம்பி நித்தியானந்தன்

மட்டக்களப்பு, கிரான் தெற்குப் பிரதேச செயலகத்தின் அனேகமான அரச அலுவலகங்கள் புலிபாய்ந்தகல் கிராமத்திலேயே அமைந்துள்ளமையினால் புதிய பஸ் சேவையை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

புலிபாய்ந்தகல் பிரதேச மக்கள் உட்பட குறித்த பகுதியிலுள்ள அலுவலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களும் புலிபாய்ந்தகல் கிராமத்துக்குச் சென்று வருவதற்கான சீரான போக்குவரத்து வசதியின்மையால் நீண்ட காலமாக பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர்.

இது சம்பந்தமாகப் பிரதேசத்தில் கடமையாற்றும் அலுவலக உத்தியோகத்தர்களும், பொது அமைப்புகளும், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசனின் கவனத்துக்குக் கொண்டு வந்ததையடுத்து, மட்டக்களப்பு - இலங்கைப் போக்குவரத்துச் சபையின் சாலை முகாமையாளரை தெரியப்படுத்தி தெளிவுபடுத்தியதுடன், புலிபாய்ந்தகல் கிராமத்துக்குப் போக்குவரத்து சேவைகளைச் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து குறித்த பிரதேசத்துக்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைப் போக்குவரத்து சபையின் சாலை முகாமையாளரும் உத்;தியோகத்தர்களும், அப்பிரதேசத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்களையும் சந்தித்ததோடு, வீதி நிலைமையினையும் பார்வையிட்டனர்.

அதனையடுத்து கடந்த புதன்கிழமை (16) தொடக்கம் புலிபாய்ந்தகல் கிராமத்துக்கான பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த பஸ் சேவையானது, மட்டக்களப்பு பிரதான பேரூந்து நிலையத்திலிருந்து காலை 7.30 மணிக்கு ஆரயம்பதிக்குச் சென்று, அங்கிருந்து மீண்டும் 8.00 மணியளவில் மட்டக்களப்பு பேரூந்து நிலையத்துக்கு வந்தடைந்து, அதன்பின்னர் மட்டக்களப்பிலிருந்து கிரான் பேரூந்து நிலையத்தை 8.30 மணியளவில் சென்றடைந்து கிரானிலிருந்து 9.00 மணியளவில் புலிபாந்தகல்லை சென்றடையும்.

அதன்பின்னர், கிரான் புலிபாய்ந்தகல்லிலிருந்து சுமார் 10.30 மணிக்கு மீண்டும் மட்டக்களப்பு பேரூந்து நிலையத்தைச் சென்றடைந்து, பிற்பகல்வேளை பயணமாக மட்டக்களப்பிலிருந்து பிற்பகல் 2 மணிக்கு கிரான் புலிபாய்ந்தகல் சென்றடைந்து, அங்கிருந்து 3.30 மணிக்கு பிற்பாடு அங்கிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணத்தை ஆரம்பிக்கும்.

மட்டக்களப்பிலிருந்து கிரான் புலிபாய்ந்தகல் பிரதேசத்துக்கு ஒரு நாளுக்கு இரண்டு தடவை போக்குவரத்தை மேற்கொள்வதுடன், ஆரயம்பதியிலிருந்து புலிபாய்ந்தகல் வரை 60 ரூபாயும், மட்டக்களப்பிலிருந்து புலிபாய்ந்தகல்லுக்கு 47 ரூபாயும் போக்குவரத்து கட்டணங்களாக அறவிடுவதாக மட்டக்களப்பு மாவட்ட அரச பஸ் போக்குவரத்து மத்திய நிலைய உதவி முகாமையாளர் கே.சிறிதரன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X