Suganthini Ratnam / 2016 நவம்பர் 13 , மு.ப. 06:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு, வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட புணாணை கிழக்குப் பகுதியில் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த 178 குடும்பங்களை குடியேற்றுவதற்கு மேற்கொள்ளும் முயற்சியைத் தடுத்து நிறுத்துமாறு தமிழ்த்;; தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோவுக்கு சனிக்கிழமை (12) அனுப்பியுள்ள கடிதத்திலேயே, அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.
அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,'நீண்டகாலமாக வடக்கு, கிழக்கு மண்ணில் கஷ்டத்தை எதிர்நோக்கிய தமிழ்ச் சமூகமானது நல்லாட்சி அரசாங்கத்தில் நிம்மதியாக வாழ முற்படுகின்றது. இவ்வேளையில், ஏற்கெனவே இருந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தைச் சேர்ந்த சில அதிகாரிகள் மீண்டும் இன முறுகலை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கின்றனர்.
தற்போதைய கிழக்கு மாகாணக் காணி ஆணையாளர், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரின் ஆலோசனையுடன்; மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்பான்மையின மக்கள் வாழாத பகுதிகளில் பெரும்பான்மையினக் குடியேற்றங்களை மேற்கொள்வதற்கு முயற்சிக்கின்றார். புணாணை கிழக்கில் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த 178 குடும்பங்களை குடியேற்ற முயற்சிக்கின்றார்.
புணாணையில் பெரும்பான்மையினக் குடும்பங்கள் 05உம் நாவலடி முற்சந்தியில் பெரும்பான்மையினக் குடும்பங்கள் 02உம் வாழ்ந்துள்ளன. ஆனால், தற்போது 29 குடும்பங்கள் புணாணையில் குடியேற்றப்பட்டுள்ளன.
மேலும், குடியேற்றப்டவுள்ள 178 குடும்பங்களுக்கும் குறித்த பகுதியில் யுத்த சூழலுக்கு முன்னர் வாழ்ந்ததாகக் கூறி போலியான காணி உறுதிப்பத்திரங்கள் சிங்களத்தில் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. இங்கு பெரும்பான்மையினக் குடும்பங்கள் வாழ்ந்திருந்தால் இவர்களைக் குடியேற்ற வேண்டியது அவசியம். ஆனால், இங்கு பெரும்பான்மையினக் குடும்பங்கள் வாழ்ந்திருக்கவில்லை.
சமாதானச் சூழலை கட்டியெழுப்பி நல்லாட்சியை தற்போதைய அரசாங்கம் ஏற்படுத்தியுள்ள இவ்வேளையில், இவ்வாறான செயற்பாடுகளும் இடம்பெறுகின்றன. இவ்விடயமாக தங்களுக்கு ஏற்கெனவே சுட்டிக்காட்டியுள்ளேன். எனவே, இந்த விடயத்தில் தாங்கள் நீதியாகச் செயற்படுவீர்கள் என நம்புகின்றோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 minute ago
8 minute ago
16 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
8 minute ago
16 minute ago