2025 மே 08, வியாழக்கிழமை

பால் குளிரூட்டும் நிலையம் காட்டு யானைகளினால் தகர்ப்பு

Niroshini   / 2015 டிசெம்பர் 14 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்   

மட்டக்களப்பு,போரதீவுப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட விவேகானந்தபுரத்தில் அமைந்துள்ள பால் குளிரூட்டும் நிலையத்துக்குள் ஞாயிற்றுக்கிழமை (13) இரவு புகுந்த காட்டுயானைகள் பால் குளிரூட்டும், நிலையத்தின் ஒரு பகுதியில் அமைந்திருந்த கதவு ஒன்றினை உடைத்துள்ளதுடன் சுற்று வேலியையும் உடைத்துச் சேதப்படுத்தியுள்ளன.

மூன்று காட்டுயானைகளைக் கொண்ட கூட்டம் ஒன்று வந்துள்ளதாகவும் இதனால், பால் குளிரூட்டும் நிலையத்தைச் சுற்றியுள்ள வயலும் சேதமடைந்துள்ளதாகவும் இவற்றால் சுமார் 30,000 ரூபாய்க்கு மேல் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் பால் பால் குளிரூட்டும் நிலையத்தின் முகாமையாளர் எஸ்.எழில்வேந்தன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X