Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 13 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.பாக்கியநாதன்
தற்போது பிளாஸ்டிக் பொருட்களின் பாவனை அதிகரித்துள்ள நிலையில், மட்பாண்டப் பொருட்களை சந்தைப்படுத்துவதில் சிரமத்தை எதிர்நோக்குவதாக மட்பாண்ட உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரியபோரதீவு, செங்கலடி, ஏறாவூர், வாழைச்சேனை ஆகிய இடங்களில் பாரம்பரிய தொழிலாக மட்பாண்டத் தொழில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இயற்கையாகக் கிடைக்கும் களிமண், சேம்புமண் மற்றும் நீரைக் கொண்டு மட்பாண்டப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஒரு வண்டில் களிமண் 1,500 ரூபாய், ஒரு வண்டில் சேம்பு மண் 800 ரூபாய் மற்றும் செய்யப்பட்ட மட்பாண்டங்களை சுடுவதற்கான தேங்காய் உரிமட்டையொன்று இரண்டு ரூபாய் படி கொள்வனவு செய்யப்படுகின்றது.
இந்த மட்பாண்டங்களுக்கேற்ப விலை வேறுபடுவதாகவும் 08 ரூபாய் முதல் 100 ரூபாய்வரை மட்பாண்டங்களை தாங்கள் விற்பனை செய்வதாகவும் இவர்கள் கூறினர்.
தாங்கள் உற்பத்தி செய்யும் மட்பாண்டப் பொருட்களை சந்தைப்படுத்துவதற்குரிய நடவடிக்கையை கைத்தொழில் திணைக்களம் எடுக்கவேண்டுமெனவும் இவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பெரியபோரதீவு மற்றும் வாழைச்சேனையில் 06 மாதங்களைக் கொண்ட மட்பாண்ட தொழில் பயிற்சிநெறி உள்ளது. இப்பயிற்சியை பூர்த்திசெய்தவர்கள் சுயதொழிலாக தங்களது வீடுகளில் மட்பாண்டங்களை உற்பத்தி செய்து வருவதாக கிராமிய தொழிற்றுறைத் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலக உதவிப் பணிப்பாளர் கே.இளங்குமுதன் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago