2025 மே 15, வியாழக்கிழமை

’பசுமை நகர்வு’ கண்காட்சி

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 நவம்பர் 21 , பி.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிளாஸ்டிக், பொலித்தீன், திண்மக் கழிவுகளை மீள் பாவனைக்குட்படுத்தி, சூழலைப் பாதுகாக்கும் நோக்கில், கண்காட்சியும் விற்பனையும், விழிப்புணர்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு விசேட தேவைக்குட்பட்ட சிறுவர்களுக்கான உதவு ஊக்க நிலையம் “மென்கபெப்” அறிவித்துள்ளது.

இக்கண்காட்சி, “பசுமை நகர்வு” எனும் தொனிப்பொருளில், மட்டக்களப்பு, மயில்வாகனம் வீதி, நாவற்கேணியில் அமைந்துள்ள மேற்படி உதவு ஊக்கப் பாடசாலையில் நாளை மறுதினம் (23) காலை 9 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது.

“மென்கபெப்” இணை இஸ்தாபகரான ரஞ்சி ஸ்டப்ஸ் தலைமையில் இடம்பெறும் இக்கண்காட்சியை, மட்டக்களப்பு மாநகர மேயர் தியாகராசா சரவணபவன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

ஆர்வமுள்ள பொதுமக்கள் அனைவரும் இக்கண்காட்சியில் இணைந்துகொள்ளுமாறு அழைக்கப்பட்டுள்ளார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .