2025 மே 21, புதன்கிழமை

பசுவை மோதிய ஓட்டுநரை கைதுசெய்ய நடவடிக்கை

Editorial   / 2017 ஒக்டோபர் 10 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

கன்று ஈனும் தருவாயிலுள்ள பசுவை மோதிவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படும் முச்சக்கர வண்டியின் சாரதியை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில், வாழைச்சேனை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

வாழைச்சேனை மட்டக்களப்பு பிரதான வீதியில் பயணித்த முச்சக்கர வண்டியின் சாரதி, அவ்வீதி வழியாக பயணித்த மேற்படி பசு மீது மோதிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

இதனால் காயமடைந்த பசு வீதியில் விழுந்துக் கிடந்த நிலையில் பொதுமக்கள் அதனை வீதியின் ஓரமாகக் கொண்டுச் சென்றுவிட்டுள்ளதுடன் இது தொடர்பில் பொலிஸாருக்கும் அறிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .