2025 மே 15, வியாழக்கிழமை

படுவான்கரைக்கான போக்குவரத்துப் பாதிப்பு

Editorial   / 2018 நவம்பர் 08 , பி.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, வ.திவாகரன், ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு மாவட்டத்தில், தொடர்ந்து பெய்துவரும் அடைமழை காரணமாக பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால், படுவான்கரைக்கான போக்குவரத்து பாதைகள் தடைப்பட்டுள்ளதுடன், மட்டு. நகர் உட்பட பல தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

மட்டக்களப்பு வாவியை அண்டிய பகுதிகள், வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், அப்பகுதி வீதிகளில் போக்குவரத்துச் செய்வதில், பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர். அத்துடன், மட்டு. நகரில் இருந்து வவுணதீவு பகுதிக்கான போக்குவரத்துகளும் தடைப்பட்டுள்ளன.

இதேபோன்று, விமான நிலைய வீதி, வளையிறவு பாலம் ஆகியவற்றுக்கு மேலாக இரண்டு அடிக்கு மேல் வெள்ளநீர் செல்வதால், அப்பகுதி போக்குவரத்துகள் தடைப்பட்டுள்ளதுடன், போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட வெல்லாவெளி - மண்டூர் பிரதான வீதியூடாகவும் வெள்ளநீர் பாய்வதன் காரணமாக, வெல்லாவெளி ஊடாக அம்பாறைக்கு செல்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் நாள்களிலும், தொடர்ச்சியாக மழை பெய்யுமானால், மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலைமை மேலும் மோசமடையலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில், மீட்புப் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக, மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .