Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2021 நவம்பர் 14 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
முன் வைக்கப்பட்டுள்ள வரவு – செலவுத்திட்டம் (பட்ஜெட்), கிராம மக்களின் வாழ்வதாரத்தை முன்னேற்றும் என தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.
கட்சி அலுவலகத்தில் நேற்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “நிதி அமைச்சரால் முன்வைக்கப்பட்ட வரவு - செலவுத்திட்டமானது கிராமத்தில் இருப்பவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றகூடியதாக அமைந்துள்ளது.
“விவசாய உற்பத்தி, விவசாய செய்கைகள் இளைஞர்களுக்கான காணி ஒதுக்கீட்டுக்காக முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. இளைஞர்களால் நாட்டுக்கு பிரச்சினைகள் இல்லாமல் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அவர்களைப் பயன்படுத்த வேண்டும். கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையிலேயே அந்த பட்ஜெட் அமைந்துள்ளது.
“எமது தலைவரினதும் எங்களதும் எண்ணக்கருவாக அமைவது பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதிகள் மூலம் எமது பிரதேசத்தை முன்னேற்றுவதும் எமது மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதுமே ஆகும்.
“பட்ஜெட்டில் எமக்கு நன்மையளிக்ககூடிய விடயங்களை நாம் பெற்றுக்கொண்டு, 2023ஆம் ஆண்டு இறுதிக்குள் எமது மக்களின் முன்னேற்ற வலுவை நாம் காட்டவேண்டும்.
“எமது மக்களின் வறுமை ஒழிய வேண்டும் போன்ற எண்ணக்கருக்கமைய அதனை செயற்படுத்த நாம் முழு முயற்சிகளையும் மேற்கொண்டு, அதனை செயற்படுத்துவோம்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
12 May 2025
12 May 2025