Editorial / 2022 மே 10 , பி.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் அமைந்திருந்த பட்டிருப்புத் தொகுதிக் காரியாலயத்தின் பதாகைகள் அப்பகுதி மக்களால் செவ்வாய்கிழமை(10) மாலை உடைத்து எரியூட்டப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்புத் தொகுதிக்குரிய ஸ்ரீ லங்கா பொதுஜனப் பெரமுன கட்சியின் காரியாலயம் ஒன்று களுவாஞ்சிகுடியில் தனியார் வீடு ஒன்றில் வடகைக்குப் பெறப்பட்டு செயற்பட்டு வந்துள்ளது. அதில் ஸ்ரீ லங்கா பொதுஜனப் பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமார், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, பஸில் ராஜபக்ஸ, உள்ளிட்டோரின் புகைப்படம் தாங்கிய பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசதாரண சூழ்நிலை காரணமாக ஸ்ரீ லங்கா பொதுஜனப் பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமாரிடம் தெரிவித்து விட்டு, குறித்த வீட்டின் உரிமையாளர் தனது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த ஸ்ரீ லங்கா பொதுஜனப் பெரமுன கட்சியின் பதாகைகளையும், மதிலில் பொருத்தப்hட்டிருந்த மொட்டு சின்னங்களையும் அகற்றியதாக பொலிசாருக்குத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள ஸ்ரீ லங்கா பொதுஜனப் பெரமுன கட்சி காரியாலயத்தின் பதாகைகள் அகற்றப்படுவதை அறிந்த மண்முனை; தென் எருவில் பற்றுப் பிரதேச சபை உறுப்பினர் மே.வினோராஜ் உள்ளிட்ட இளைஞர்கள் அவ்விடத்திற்கு விரைந்து குறித்த பதாகைகளையும் அகற்றி அக்காரியத்திற்குள் வைக்கப்பட்டிந்த ஏனைய பதாகைகளையும், எடுத்துவந்து வீதியோரத்தில் போட்டு மண்ணெண்ணை ஊற்றி எரித்துள்ளனர்.
இவ்விடையமறிந்த களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, அப்பகுதி உதவிப் பொலிஸ் அத்தியட்சகள் உள்ளிட்ட குழுவினர் நிலமையை அவதானித்து கூடிநின்ற இளைஞர்களை அவ்விடத்திலிருந்து அகற்றியதோடு, குறித்த காரியாலயம் அமைந்திருந்த வீட்டின் உரிமையாளருடன் நிலமை தொடர்பில் விடையத்தை கேட்டறிந்து முறைப்பாட்டையும் பதிவு செய்துள்ளனர்.
7 hours ago
7 hours ago
8 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
8 hours ago
20 Dec 2025