2025 மே 13, செவ்வாய்க்கிழமை

பதிவை நிறுத்தக் கோரி ஜனாதிபதிக்கு கடிதம்

Suganthini Ratnam   / 2016 மார்ச் 10 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு நகரில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டுவரும் பதிவு நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறு கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மட்டக்களப்பு காந்திசேவா சங்கம் அவசரக் கடிதமொன்றை இன்று வியாழக்கிழமை அனுப்பியுள்ளது.

இந்தப் பதிவு நடவடிக்கை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனின் கவனத்துக்கும் கொண்டுவரப்பட்டுள்ளதாக மேற்படி சங்கத்தின் தலைவர் ஏ.செல்வேந்திரன் தெரிவித்தார்.
அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'அவசரகாலச் சட்டம் 23இன் கீழும் பொலிஸ் சட்டம் 76இன் கீழும் குடியிருப்பாளர்களை பதிவு செய்ய வேண்டுமெனத் தெரிவித்து அதற்கான விண்ணப்பப்படிவங்களை மட்டக்களப்பு நகரில்; பொலிஸார் விநியோகித்து வருகின்றனர். இந்த விண்ணப்பப்படிவங்கள் தொடர்பில் அவசரகாலச் சட்டத்தின் கீழ் பதிவு செய்வதற்கு எந்தவொரு காரணமும் தற்போது இல்லை' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

'தற்போது யுத்தம் இடம்பெறாத நிலையில், அசாதாரண சூழ்நிலை இல்லாத நிலையில் மட்டக்களப்பு நகரில் பதிவை பொலிஸார் மேற்கொள்ளும்போது, மக்கள் அச்சமடைந்துள்ளனர்.  இந்தப் பதிவு நடவடிக்கை தேவையானதா என்பதை அறிய வேண்டியுள்ளது.

மக்களை அச்சமடையச் செய்யும் இவ்வாறான செயற்பாடுகளினூடாக நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதான மற்றும் நல்லிணக்கச் சூழ்நிலையானது, அபாயகரமான சூழ்நிலைக்குக் கொண்டு செல்லப்படுகின்றதோ என்று எண்ணத்  தோன்றுகின்றது.
மக்கள் அச்சமடைந்துள்ள இந்தப் பதிவு விடயத்தில் ஜனாதிபதி உடனடியாகத் தலையிட்டு பதிவு நடவடிக்கையை நிறுத்தி மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டுமென்று மட்டக்களப்பு காந்திசேவா சங்கம் கேட்டுக்கொள்கின்றது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X