2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

பதவி உயர்வு; செயலாளருக்கு பாராட்டு

Editorial   / 2022 மார்ச் 07 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

உதவிப் பிரதேச செயலாளராக பதவி உயர்வு பெற்றுச் செல்லும் ஏறாவூர் நகர சபைச் செயலாளர் எம்.ஆர். ஷியாஹுல் ஹக்கிற்கு  கௌரவமும் பாராட்டும் அளித்து வழியனுப்பும் வைபவம், ஏறாவூர் வாவிக்கரையோ கலாசார மண்டபத்தில் நேற்றிரவு (06) நடைபெற்றது.

ஏறாவூர் நகர சபைத் தலைவர் எம்.எஸ். நழிம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஏறாவூர் பொலிஸ் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.கே.ஏ. ஜவாகீர், ஏறாவூர் நகர சபையின் புதிய செயலாளர் எச்.எம்.எம். ஹமீம் உட்பட ஏறாவூர் நகர சபை உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை அதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் பதவி உயர்வு பெற்று இடமாற்றலாகிச் செல்லும் செயலாளரின் சேவைகளையும் அவரது திறமைகளையும் அதிதிகள் பாராட்டிப் பேசினர்.

இதன்போது இலங்கை நிர்வாக சேவை அதிகாரியான ஏறாவூர் நகர சபைச் செயலாளர் எம்.ஆர். ஷியாஹுல் ஹக் வாழ்த்தி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதோடு, அவருக்கு நினைவுப் படிகங்களும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X