Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
கே.எல்.ரி.யுதாஜித் / 2018 மே 28 , பி.ப. 09:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதினெண் சித்தர் பீடத்தின் இன்றைய குருநிலை அருள்மிகு காசி விசாலாட்சி சன்னிதானம், திருவிடத்து பெரியவாள் சித்தர் ரா. முத்துராசமூர்த்தி இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
குருநிலை அவர்கள் வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் ஆன்மீகச் சொற்பொழிவுகள், யாகம், பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார்.
திருகோணமலை குச்சவெளி செம்பீஸ்வரர் ஆலயத்தில் கௌரியம்மன் சிலை பிரதிட்டைம், வேல் பிரதிட்டை, சிவவேள்வி, பராசத்தி யாகம் (ஐந்தீவேட்டல்) ஆகியன நடைபெறுகின்றன. அடியார்கள் சந்திப்பு, அருள்வாக்கு, பரிகாரம் செய்தல், விசேட சொற்பொழிவு, குருநிலை அடியார் சந்திப்பும் என பல்வேறு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
தம்பிலுவில் முனையூர், ஸ்ரீ படபத்திரகாளியம்மன் தேவஸ்தானம், செவ்வாய்க்கிழமை (29) ஆலையடிவேம்பு அடியார் இல்லத்தில் காலை 9 மணிமுதல் குருநிலை அடியார் சந்திப்பும், அருள்வாக்கும் நடைபெறும். பி.ப 3.00 மணி முதல் மாலை 6மணி வரை சொற்பொழிவு, கருத்து-விளக்கமும் நடைபெறவுள்ளது.
30.05.2018 புதன்கிழமை முதல் குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி ஆலயத்தில் இந்து தமிழ் வேதாகம பயிற்சிகளை பதினெண் சித்தர் பிடத்தின் குருநிலை திருவிடத்து பெரியவாள் சித்தர் ரா. முத்துராசமூர்த்தி ஆரம்பித்து வைக்கிறார். இப் பயிற்சிகள் 05.06.2018ம் திகதி செவ்வாய்க்கிழமை வரை தொடர்ச்சியாக தினமும் காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெறும்.
வியாழக்கிழமை (31) 10 மணி முதல் ந.ப 12.30 மணி வரை வந்தாறுமூலையிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கருத்து-விளக்கம், சந்தேக நிவர்த்தி நிகழ்வுகளின் குருநிலை கலந்து கொள்கிறார்.
புதன்கிழமை (06) பி.ப 3.00 மணி முதல் மாலை6.00 மணி வரை களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மணி மண்டபத்தில் கருத்து-விளக்கம், சந்தேக நிவர்த்தி நிகழ்வுகளின் குருநிலை கலந்து கொள்வார் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago