Janu / 2025 டிசெம்பர் 07 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டு, அம்பாறை மாவட்டங்களில் பேரிடரால் தடைப்பட்டிருந்த மின்சாரம் பத்து நாட்களுக்கு பின்னர் வழமைக்கு திரும்பியது.
அம்பாறை, மஹியங்கனை மற்றும் வவுணதீவு ஆகிய வலயங்களுக்கு தேவையான மின்சாரத்தை வழங்கத் தேவையான கோபுரத்தை அமைக்கும் பணியில் இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் கடந்த ஒன்பது நாட்கள் இரவு பகல் பாராமல் ஈடுபட்டிருந்தனர்.
இதுவரை சுழற்சி முறையில் நாளொன்றுக்கு ஒரு மணி நேரம் முறை மாற்று அடிப்படையில் மின்சாரம் சில பகுதிகளுக்கு வழங்கப்பட்டு வந்தது.
நாட்டில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக குறித்த கோபுரம் முற்றாக சேதமடைந்திருந்ததுடன் இதனால் அம்பாறை, மஹியங்கனை மற்றும் வவுணதீவு ஆகிய பிரதேசங்களுக்கு கடந்த 27 ஆம் திகதியிலிருந்து ஒன்பது நாட்களாக மின்சாரம் தடைப்பட்டிருந்தது .
ரன்தம்பே, மஹியங்கனையில் இருந்த 132kV உயர் மின்னழுத்த இணைப்பின், 15வது கோபுரமே இவ் அனர்த்தத்தில் சுருண்டு விழுந்தது.
அதனையடுத்து இலங்கை மின்சார சபை, சிரமங்களுக்கு மத்தியில் உடனடியாக சேதமடைந்த மின் பரிமாற்ற பாதையை சரி செய்து, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மின் விநியோகத்தை சீர்செய்யும் பணிகளை துரித கதியில் முன்னெடுத்திருந்தது.
தடைபட்டிருந்த மின்சாரம் மீண்டும் கிடைத்ததில் அப் பகுதி மக்கள் பெருமகிழ்ச்சி அடைந்ததுடன் இதற்காக மக்கள், ஜனாதிபதிக்கும் இலங்கை மின்சார சபையினருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.


21 minute ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
8 hours ago