2025 மே 21, புதன்கிழமை

பனம் விதைகள் 10,000 நடுகை

வ.துசாந்தன்   / 2017 ஒக்டோபர் 02 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட தாந்தாமலைப் பகுதியில் முதன்முறையாக தாந்தாமலை கிராமசேவையாளர் பிரிவில் வசிக்கும்  270 பேர் இணைந்து, 10,000 பனம் விதைகளை இன்று (02) நட்டினர்.

கிராமங்களுக்குள் யானைகள் புகுவதைத் தடுக்கும் நோக்கில், பனம் மரங்களை உருவாக்குவதற்காக, யானை வேலியின் அருகாமையில் நெருக்கமாக இப்பனம் விதைகள் நடப்பட்டன.

கிராமசேவை உத்தியோகத்தர் ய.சயந்தனின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் வனவள, வனஜீவராசிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .