Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
வா.கிருஸ்ணா / 2018 நவம்பர் 20 , பி.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
பருத்தித்துறை நகரசபைத் தவிசாளர் ஜோ.இருதயராஜா தலைமையிலான நகரசபை உறுப்பினர்கள், மட்டக்களப்பு மாநகரசபைக்கு, இன்று (20) விஜயமொன்றை மேற்கொண்டனர்.
மட்டக்களப்பு மாநகரசபை மேயர் தியாகராஜா சரவணபவன் அழைப்பின் பேரில், யாழ்ப்பாணம், பருத்தித்துறை நகரசபைத் தவிசாளர், உபதவிசாளர் தலைமையிலான நகரசபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் இந்த விஜயத்தை மேற்கொண்டனர்.
இக்குழுவினர், மட்டக்களப்பு மாநகர மேயர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டதுடன், மாநகரசபை அமர்வுகள் நடைபெறும் சபை மண்டபம் , மேயரின் அலுவலகம் ஆகியவற்றையும் பார்வையிட்டதுடன், மட்டக்களப்பு மாநகரசபையால் முன்னெடுக்கப்பட்டுள்ள மரநடுகை வேலைத்திட்டங்களையும் பார்வையிட்டனர்.
இந்தக் கள விஜயம் தொடர்பாக பருத்தித்துறை நகரசபைத் தவிசாளர் ஜோ.இருதயராஜா தெரிவிக்கையில், இங்கு பெற்றுகொண்ட அனுபவங்களைக் கொண்டு, தமது நகரசபைகுட்பட்ட பிரதேசங்களில் 1,000 மரக்கன்றுகளை நடுவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago