2025 மே 13, செவ்வாய்க்கிழமை

பலாச்சோலைக் கிராமத்தில் யானைகள் அட்டகாசம்

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 29 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு, பலாச்சோலைக் கிராமத்தினுள் இன்று திங்கட்கிழமை அதிகாலை உட்புகுந்த 6 காட்டு யானைகள்  வீடொன்றை முற்றாகச் சேதப்படுத்திய அதேவேளை, 25 க்கும் மேற்பட்ட நெல் மூடைகளையும் சேதப்படுத்தியுள்ளன.

அத்துடன் பயன் தரும்  மரங்களான தென்னை, வாழைகளையும் அழித்துவிட்டு காட்டு யானைகள் சென்றுள்ளன.

இந்த காட்டு யானைகளின் அட்டகாசத்தினால் அச்சம் அடைந்த மக்கள் விடிய, விடிய விழித்திருந்தனர்.  தீப்பந்தம் ஏந்தியும் பட்டாசு கொழுத்தியும் சத்தமிட்டுமே இந்த யானைகளை விரட்ட முடிந்ததாக அக்கிராமவாசிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் அக்கிராமவாசிகள் அப்பகுதி கிராம சேவை உத்தியோகஸ்தருக்கும் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளுக்கும் அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து குறித்த கிராமத்துக்குச் சென்ற  கிராம சேவை உத்தியோகஸ்தரும் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளும் சேத விவரங்களை  பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.
 
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X