2025 மே 23, வெள்ளிக்கிழமை

பலகையில் துப்பாக்கி தயாரித்தவர் கைது

Editorial   / 2017 செப்டெம்பர் 01 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சபேசன்

பாவனைக்கு உதவாத துப்பாக்கியின் பாகங்களைக் கொண்டு, மரப்பலகைகளைப் பயன்படுத்தி, துப்பாக்கியொன்றைத் தயாரிப்பதற்கு முயன்ற ஒருவரை, சம்மாந்துறை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

அம்பாறை, சம்மாந்துறை உடங்கா-2 பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயது மதிக்கத்தக்க ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என, சம்மாந்துறைப் பொலிஸ் பெருங் குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.  

அந்தவகையில், பாழடைந்த வீட்டிலிருந்து, மூன்று கிழமைக்கு முன்னர் கண்டெடுக்கப்பட்ட பையிலிருந்த, பாவனைக்குதவாத துப்பாக்கிப் பாகங்களை வைத்தே, இவர் துப்பாக்கியொன்றை செய்வதற்கு முயன்றுள்ளார் என்று அறியமுடிகிறது.   

30ஆம் திகதி இரவு, கைது செய்யப்பட்ட சந்தேகநப​ரை, சம்மாந்துறை நீதவான் நீமன்றத்தில், ஆஜர் படுத்தவுள்ளதாகத் தெரிவித்த சம்மாதுறை பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ​மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X