Princiya Dixci / 2021 ஒக்டோபர் 26 , பி.ப. 12:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
நாடளாவிய ரீதியில் உள்ள கூட்டுறவு விற்பனை நிலையங்கள் ஊடாக பழைய விலையில் பால்மா பக்கெட்டுகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
ஜனாதிபதியின் பணிப்பின் பேரில், கூட்டுறவு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவினால் இந்தச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்படி, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கூட்டுறவுச் சங்கங்களில் பழைய விலைக்கு பால்மா விற்பனை செய்யும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு அரசடியில் உள்ள கூட்டுறவு அபிவிருத்தி சபை வளாகத்துக்குக் கொண்டுவரப்பட்ட பால்மா பக்கெட்டுக்கள், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 16 கூட்டுறவு விற்பனை நிலையங்களுக்கு பகிர்ந்தளிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.வி.தங்கவேல் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையில், கூட்டுறவு அபிவிருத்தி சபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
மாவட்டத்தில் உள்ள 16 கூட்டுறவு விற்பனை நிலையங்கள் ஊடாகவும் இன்று (26) முதல் பால்மா பக்கெட்டுக்களை பொதுமக்களுக்கு வழங்கும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் தெரிவித்தார்.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago