2025 மே 13, செவ்வாய்க்கிழமை

பஸ் – ஓட்டோ விபத்து மூவர் படுகாயம்

Editorial   / 2021 நவம்பர் 18 , பி.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாவட்டத்தின் சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சித்தாண்டியில் பஸ்ஸுடன் ஓட்டோ ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பிலிருந்து வாழைச்சேனை நோக்கிப் பயணித்த பஸ்ஸுடன் சந்தி வெளியிலிருந்து செங்கலடி நோக்கிப் பயணித்த ஓட்டோவே, இன்று (18) பிற்பகல் மோதி விபத்துக்குள்ளானது.

இதன்போது ஓட்டோவில் பயணித்த மூவரும் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஓட்டோ சாரதி கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த விபத்து தொடர்பில் பஸ் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X