2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

பாடசாலைகளுக்கு உடல் வெப்பநிலையை அளவிடும் கருவிகள்

Editorial   / 2020 மே 15 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.எம்.ஏ.பரீத்

கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் உடல் வெப்பநிலையை அளவிடும் கருவிகளை வழங்குமாறு மாகாண ஆளுநர் அனுரதா யஹம்பத், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கிழக்கு மாகாண உயர் தரப் பாடசாலைகளுக்கு முதற்கட்டமாக இவை வழங்கப்படவுள்ளன.

திருகோணமலை மாவட்ட ஆளுநர் செயலகத்தில் அதிகாரிகளுக்கிடையே இடம்பெற்ற கலந்துரையாலின் போதே, ஆளுநர் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் முடிவின்படி, க.பொ.த.உயர்தர  வகுப்புகள் உள்ள சுமார் 300 மாகாண பாடசாலைகள் திறக்கப்பட உள்ளன. இன்படி, 300 பாடசாலைகளுக்கும் உடல் வெப்பநிலையை அளவிடும் கருவிகள் வழங்கப்படவுள்ளன.

அத்துடன், கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் திறக்கப்படுவதற்கு முன்னர், கொரோனா வைரஸைத் தவிர்ப்பதற்காக, குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பதற்காக விளம்பரங்களுடன், அறிவுறுத்தல் பதாகைகளை காட்சிப்படுத்துமாறும், மாகாண கல்வி அதிகாரிகளை, ஆளுநர் கேட்டுக்கொண்டார்.

இது தவிர, பாடசாலைகளை சுத்தப்படுத்தல், தொற்றுநீக்குதல்,  நீர் வழங்குவதில் கவனம் செலுத்தல் குறித்தும் கவனம் செலுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

பாடசாலைகள் ஆரம்பமாவதற்கு ஒரு வாரத்துக்குள் இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் முடிக்குமாறு, ஆளுநர் அறிவுறுத்தினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .