2025 மே 07, புதன்கிழமை

பாதசாரிக் கடவையில் விபத்து; உத்தியோகத்தர் படுகாயம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2020 பெப்ரவரி 10 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொழும்பு – மட்டக்களப்பு நெடுஞ்சாலையின் ஏறாவூர் நகர்ப் பகுதியில் இன்று (10) காலை இடம்பெற்ற விபத்தில், நீர்ப்பாசனத் திணைக்கள உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்து, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரென, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில், வாழைச்சேனையைச் சேர்ந்த ஜயரட்ணம் ரமேஷ் என்பவரே படுகாயமடைந்துள்ளார்.

இவர் பயணித்த மோட்டார் சைக்கிள், வேகக் கட்டுப்பாட்டை இழந்து பாதசாரிக் கடவையில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் படுகாயமடைந்த இவர், உதவிக்கு விரைந்தோரால்  முன்னதாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார்.

பின்னர், மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விபத்து பற்றி, ஏறாவூர் வீதிப் போக்குவரத்துப் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X