2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

பாதுகாப்பு நடைமுறைகளுடன் உரமானிய விநியோகம்

Editorial   / 2020 ஏப்ரல் 30 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சபேசன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பகுதியான மண்டூர் கமநல கேந்திர நிலையத்தில், சிறுபோக நெற்செய்கைக்கான உரம் மானியமாக விநியோகிக்கப்பட்டு வருவதுடன், 85 சதவீதமா விவசாயிகளுக்கு உரமானியம் வழங்கும் நடவடிக்கை நிறைவுபெற்றுள்ளதாக, கமநலசேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.ஜெயக்காந்தன் தெரிவித்தார்.

முழுமையான சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுடனேயே பசளை விநியோகிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். 

ஒவ்வொரு கமநல அமைப்புகளுக்கும் தனித் தனி திகதிகள் ஒதுக்கப்பட்டு, விவசாயிகள் முகக்கவசம் அணிந்து வருவதுடன், இரு நபர்களுக்கிடையில் 1 மீற்றர் இடைவெளியில் அடையாளங்கள் இடப்பட்டு, சமூக இடைவெளி பேணப்படுவதுடன், அனைத்து விவசாயிகளும் தொற்றுநீக்கி கொண்டு, கைகளை கழுவுவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X