2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

பாரம்பரிய, கலாசார மரபுகளைத் தேடும் களப்பயணம்

Suganthini Ratnam   / 2017 ஜூன் 20 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் கடந்த வாரம் நடைபெற்ற சர்வதேச ஆராய்ச்சி மாநாட்டின் ஓர் அங்கமாக மட்டக்களப்பு, படுவான்கரைப் பிரதேசத்துக்கு திங்கட்கிழமை (19)  பாரம்பரிய, கலாசார மரபுகளைத் தேடிய ஒருநாள் களப்பயணம் மேற்கொள்ளப்பட்டது என, மேற்படி நிறுவகத்தின்; பணிப்பாளர் கலாநிதி சிவஞானம் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

இதன்போது, வெல்லாவெளியில் புராதன நாகர் காலத்தில் செதுக்கப்பட்டதெனக் கருதப்படும் கல்வெட்டுகள் மற்றும் தாந்தாமலையிலுள்ள முனிவர் மலைக்குகை உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று இவர்கள்  பார்வையிட்டனர்.

இந்தக் களப்பயணத்தில் மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகக் கல்வியாளர்களுடன் இணைந்து இந்தியாவைச் சேர்ந்த விரிவுரையாளர்கள், கொழும்பு மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் இணைந்திருந்தனர்.

'போரும் போருக்குப் பின்னரான காலத்தில் தொட்டுணரா அல்லது அருவப் பண்பாட்டு மரபுகள் எதிர்கொள்ளும் சவால்களும் முக்கியத்துவமும்' என்ற தொனிப்பொருளில் சர்வதேச ஆராய்ச்சி மாநாடு, மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் ஏற்பாட்டில் கடந்த 15ஆம் திகதி தொடக்கம் 17ஆம் திகதிவரை உள்ளக நிகழ்வாக இடம்பெற்றிருந்தது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X