2025 மே 21, புதன்கிழமை

பாலத்துக்கான அடிக்கல் நாட்டல் பிற்போடப்பட்டது

Kogilavani   / 2017 ஒக்டோபர் 06 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

தம்பிப்பிள்ளை தவக்குமார்

மண்டூர் குருமன்வெளி பாலத்துக்கான  அடிக்கல் நாட்டும் திகதி  மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, ஐக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்பு தொகுதியின் பிரதம அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான சோ.கணேசமூர்த்தி, இன்று தெரிவித்துள்ளார்.

மேற்படி பாலத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, நாளை மறுதினம்  நடைபெறவிருந்தது. இந்நிலையில் இத்திகதி பிற்போடப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 14 ஆம் திகதி அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெறுமென அவர் கூறினார்.

இந்நிகழ்வில், நெடுஞ்சாலைகள் அமைச்சர்  லக்ஷ்மன் கிரியெல்ல கலந்துகொண்டு, அடிக்கல்லை நாட்டி வைக்கவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .