2026 பெப்ரவரி 05, வியாழக்கிழமை

பாவனைக்குதவாத உணவுகள்; 4 வர்த்தக நிலையங்கள் மீது வழக்கு

Editorial   / 2021 நவம்பர் 18 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு சுகாதார வைத்தியதிகாரி பிரிவில், மனித பாவனைக்குதவாத உணவுப் பொருட்களை விற்பனை செய்த 4 வர்த்தக நிலையங்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

அவ்வர்த்தக நிலையங்களிலிருந்து மனித பாவனக்கு உதவாத 100 கிலோகிராம் உணவுப் பொருள்கள் கைப்பற்றப்பட்டதாக கோட்டைமுனை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ரி.மிதுன்ராஜ் தெரிவித்தார்.

இத்தேடுதல் நடவடிக்கையில், மட்டக்களப்பு தாதியர் பயிற்சிக் கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் இன்று (18) காலை முதல் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு பொதுச் சந்தை உட்பட நகரிலுள்ள பேக்கரிகள், சில்லறைக் கடைகள், ஹோட்டல்கள் மற்றும் மரக்கறிக் கடைகள் உட்பட 16 கடைகளில் தேடுதல் நடத்தியபோதே, 4 வர்த்தகர்கள் சிக்கியதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X